பாரத பிரதமரின் திட்டமான கூட்டுறவின் மூலம் வளர்ச்சி என்பதனை அடையும் விதமாக உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் தலைமையில் 10, 000 கூட்டுறவு சங்கங்கள் துவக்கி வைக்கப்பட்டது. இதில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளஞ்சல் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கம், பட்டினச்சேரி மீனவ மகளிர் கூட்டுறவு சங்கம் மற்றும் மண்டபத்தூர் மீனவர் கூட்டுறவு சங்கம் ஆகியவை மீன்வளத்துறை துணை இயக்குனர் கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.