காரைக்காலில் உள்ள கிராமங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் "மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியர்" திட்டம் நிகழ்ச்சி நாளை 02. 01. 2025 (வியாழக்கிழமை) அன்று காலை 09. 00 மணி முதல் மதியம் 12. 00 மணி வரை நிரவி-திருபட்டினம் தொகுதிக்கு உட்பட்ட நடுகளம்பேட் அங்கன்வாடி மையத்தில் நடைபெறவுள்ளது. எனவே அப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் புகார்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.