காரைக்கால் மக்கள் நலக்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் காரைக்காலில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரி குப்பை கழிவுகளை அப்படியே சாலை ஓரங்களில் அள்ளிபோட்டு சில நாட்கள் கழித்து அப்புறப்படுத்தப் படுகிறது. இப்படி செய்வதால் வீதிகளில் துர்நாற்றம் வீசுகிறது, சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் கால்வாய்கள் தூர்வாரும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.