காரைக்கால் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்வுக்காக பங்கேற்க வந்த புதுச்சேரி மாநிலத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காரைக்கால் அடுத்த உலக புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.