காரைக்காலில் 1 முதல் 19 வயது உடையவர்களுக்கு குடற்புழு நீக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் பிப்ரவரி 10 தேசிய குடற்புழு நீக்க தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குடற்புழு நீக்க தினம் ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காரைக்காலில் சுகாதார நலவழித்துறை துணை இயக்குநர் மருத்துவர் சிவராஜ் குமார் அவர்கள் தேசிய குடற்புழு நீக்க தினம் 2025 திட்டம் குறித்து விளக்கினார்.