காரைக்கால் மாவட்ட தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் ஒழிப்பு குறித்து குழந்தை பாதுகாப்பு கமிட்டி சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கமிட்டி தலைவரும், காரைக்கால் மாவட்ட ஆட்சியருமான சோமசேகர் அப்பாராவ் அவர்கள் தலைமை வகித்தார்கள். மேலும் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.