புதுச்சேரி சேர்ந்த தன்னம்பிக்கை கலைக்குழு அமைப்பாளர் எலிசபெத் ராணி தொடர்ந்து 76 நிமிடங்கள் இடைவிடாமல் விழிப்புணர்வு பொம்மலாட்டம் நிகழ்ச்சியை நடத்தி உலக சாதனை படைத்தார். அவரது இந்த சாதனையை Each World Records நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இதற்காக புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் சாதனைப் பெண்மணி எலிசபெத் ராணிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி சிறப்பித்தார்.