காரைக்கால் அடுத்த நல்லெழுந்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாணவர்களிடம் கல்வி சம்பந்தமான சில கேள்விகளை கேட்டு பள்ளி கரும்பலகையில் வாய்ப்பாட்டை எழுத சொல்லி உற்சாகப்படுத்தினார். மேலும் நன்கு படிக்க வேண்டும் எனவும் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் எனவும் மாணவர்களை கேட்டுக் கொண்டார்கள். இந்த ஆய்வில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.