புதுச்சேரியில் அமைந்துள்ள அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அவர்கள் அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்கள். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆட்சியர் அவர்கள் சிகிச்சைக்கு வரும் பொது மக்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளனவா என்பது குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து கோப்புகளை பார்வையிட்டார்கள்.