புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை கண்டித்து காரைக்கால் மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய கூட்டணி சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம் மற்றும் நாக தியாகராஜன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.