கோடை வெப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி விலங்குகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் காரைக்கால் அடுத்த உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஶ்ரீ சனீஸ்வரர் பகவான் கோவிலில் உள்ள யானை பிரானாம்பிகை (எ) பிரக்ருத்திக்கு ஷவரில் ஆனந்த குளியல் போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.