காரைக்கால் அடுத்த நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் அவர்கள் விழிதியூர் பகுதியில் ஆற்றங்கரை தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நேற்று பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.