காரைக்கால் தலத் தெருவில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல் நிலைப் பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் ஜெயா தலைமை வகித்தார்கள. விழாவில் பள்ளியின் எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் காரைக்கால் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.