காரைக்காலில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது

69பார்த்தது
காரைக்காலில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் மாவட்ட நீதிபதி முருகானந்தம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் காரைக்கால் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் உள்ளிட்ட 635 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முடிவில் 216 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 21 லட்சத்து 91 ஆராயிரத்து 300 வசூலிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி