காரைக்கால் அடுத்த அத்திப்படுகை பகுதியில் திருநள்ளாறு தேவஸ்தானத்துக்கு சொந்தமான தோப்பில் 2 மாமரம், ஒரு பனை மரம் வெட்டப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்திய சங்கர் என்பவர் மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.