காரைக்கால் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நாள்தோறும் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவர்கள் 2 பேரை மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிந்த நாய்கள் கடித்ததில் காயமடைந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு முதல் உதவி வழங்கப்பட்டது. எனவே மருத்துவமனையில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.