புதுச்சேரி காவல்துறை இந்திய ரிசர்வ் பட்டாலியனின் 21 ஆம் ஆண்டு உதய நாளான இன்று (ஏப்ரல் 1) காரைக்கால் நிரவி சாலையில் உள்ள ஐஆர்பி காவல்துறையினரின் அலுவலகத்திற்கு இன்று (ஏப்ரல் 1) காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா காவலர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என ஐ.ஆர்.பி காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.பி காவலர்கள் உடன் இருந்தனர்.