"தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்” எனும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் கனகலட்சுமியை பாராட்டி, Croydon தமிழ் சங்கத்தினர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவிக்க உள்ளனர். சென்னை ஷெனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பை கைவிட்டு இடைநிலை ஆசிரியராக பதவி இறங்கி தமிழ் கற்கும் பணியில் இவர் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.