சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 41 வயது ஒப்பந்த ஆசிரியைக்கு, பாலியல் தொல்லை கொடுத்த PT ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 53 வயதான PT ஆசிரியர் அறிவழகன், குடியரசு தினத்தன்று பள்ளி மைதானத்தில் இருந்த ஆசிரியைக்கு, போன் செய்து தனது அறைக்கு வருமாறு கூறியுள்ளார். தொடர்ந்து, அவரது அறைக்குச் சென்றபோது, அங்கிருந்த அறிவழகன் கதவை உள்பக்கமாக தாழிட்டு, ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.