தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை சார்பில் நேற்று (மார்ச் 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் தங்கச்சிமடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம், தமிழர் மீட்புக்களம் தலைவர் கரிகாலப்பாண்டியன், தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.