ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம்.. இளம்பெண் கைது

63பார்த்தது
ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம்.. இளம்பெண் கைது
சென்னை: அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஸ்பா மற்றும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்ததில், அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஸ்பாவின் உரிமையாளரான விக்னேஷின் மனைவி பிரேமா (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை போலீசார் மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் தங்கவைத்தனர்.

தொடர்புடைய செய்தி