வீட்டில் நடந்த விபச்சாரம்.. 3 இளம் பெண்கள் மீட்பு

77பார்த்தது
வீட்டில் நடந்த விபச்சாரம்.. 3 இளம் பெண்கள் மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தண்டேகுப்பம் தமிழ்நாடு ஓட்டல் அருகே இருக்கும் வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வருவதும் போவதுமாக இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் அந்த வீட்டில் சோதனையிட்ட போலீசார், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம்பெண்களை மீட்டனர். மேலும், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களான சுரேஷ் பாண்டிபுகா (33), பிரதாப் (34) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி