மதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த முத்துரத்தினம், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இவர் 2021-ம் ஆண்டு தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக வேட்பாளராக களமிறங்கியவர். துரை வைகோவின் வருகைக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டதால் முத்துரத்தினம் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. திமுகவுடன் மதிமுக கூட்டணியில் இருக்கும்போது அவர் கட்சியில் இணைந்திருப்பது கவனிக்க வேண்டிய நகர்வுதான்.