மத்திய பட்ஜெட் 2025-26 உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிராமப்புற இந்தியாவில் தரமான கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முன்முயற்சிகளை கோடிட்டுக் காட்டினார். அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகள் முழுவதும் 50,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வகங்கள் மாணவர்களிடையே படைப்பாற்றல், புதுமை மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.