புரோ கபடி 11வது லீக் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில், அரியானா ஸ்டீலர்ஸ், டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தன. நேற்று (டிச.26) இரவு நடந்த ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் இன்று (டிச.27) இரவு 8 மணியளவில் நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில், தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.