தென்காசி மாவட்டத்தில் பள்ளி பேருந்து மீது டாடா ஏசி வாகனம் மோதிய விபத்தில் 6 பள்ளி குழந்தைகள் காயமடைந்துள்ளனர். யானை பாலம் அருகே கட்டைகளை எற்றிச் சென்ற டாடா ஏசி வாகனம் ஒன்று, எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 6 பள்ளி குழந்தைகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.