கோயம்புத்தூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் தவுட்டுபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் (48) என்பவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 02) சிறையில் உள்ள 3வது பிளாக்கில் இருந்த சிவக்குமார் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.