தியாகிகள் வாரிசுகளின் இடஒதுக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டுவரக்கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் போராடி வந்தனர். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதால் அங்கு போராட்டம் மேலும் வலுப்பெற்றது. ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வெளிநாடு தப்பிச்சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.