இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில், பாகிஸ்தானின் தாக்குதலை தீரத்துடன் எதிர்கொண்டு இந்தியா மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, போரில் பங்கேற்ற விமானப்படை வீரர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார். பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்குச் சென்ற பிரதமருக்கு வீரர்கள் 'வந்தே மாதரம்', 'பாரத் மாதா கி ஜெய்' முழக்கத்துடன் உற்சாக வரவேற்பு வழங்கினர்.