ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி

73பார்த்தது
கனடா பிரதமர் மார்க் கார்னி-யின் அழைப்பை ஏற்று இம்மாத இறுதியில் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில்  பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஜி7 எனப்படும் பெரும் பொருளாதார வளர்ந்த நாடுகள் அமைப்பில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகள் இடம்பெற்றுள்ளன. வட அமெரிக்க நாடான கனடாவில், ஜி7 மாநாடு, வரும் 15 - 17ல் நடக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார்.

தொடர்புடைய செய்தி