கரீபியன் தீவு நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 'தி ஆர்டர் ஆப் தி ரிப்பப்ளிக் ஆப் டிரினிடாட் அன்டு டொபாகோ' என்ற விருதை அந்நாட்டு அதிபர் கிறிஸ்டின் கங்காலூ வழங்கினார். வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மோடியின் செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைமை, இந்திய புலம்பெயர்ந்தோருடனான ஆழமான பிணைப்பு மற்றும் கொரோனா தொற்று காலத்தின் மனிதாபிமான முயற்சிகளுக்காக கௌரவிக்கப்பட்டார்.