சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் 'சிந்தூர்' மரக்கன்றை தனது கைகளாலேயே நட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கவனம் பெற்ற நிலையில் 'சிந்தூர்' மரக்கன்றை பிரதமர் மோடி நட்டுள்ளார். இந்த மரக்கன்று பெண்கள் சிலர் பிரதமருக்கு அன்பளிப்பாக கொடுத்ததாகும்.