இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் நடைபெறும் தாக்குதல் மற்றும் பதிலடி சம்பவங்கள் நிறுத்தப்படுவதாக நேற்று (மே 10) அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து வாக்குறுதிகளை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு இந்திய முப்படை வீரர்களும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து இந்திய முப்படைகள் தரப்பில் இன்று மாலை 6:30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.