நடிகரும், தேமுதிக நிறுவனத்தலைவருமான 'கேப்டன்' விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (டிச. 28) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து விஜயகாந்த் 'குரு பூஜை' நிகழ்வாக தேமுதிகவினர் நடத்துகின்றனர். இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை அவரின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா கண்ணீருடன் கட்டிப்பிடித்து அழுத காட்சி தொண்டர்கள் மனதை உருக்கியது.