பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜிதேந்திரா என்ற ஆசிரியர் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி 12 மாதங்கள் விடுமுறை எடுத்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணையில், பல ஆண் ஆசிரியர்கள் இதேபோல விடுமுறை எடுத்தது தெரியவந்துள்ளது. ஆசிரியர்களுக்கான விடுமுறை எடுக்கும் இணையதளத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறை பயன்படுத்தி ஆண் ஆசிரியர்கள் கர்ப்பகால விடுமுறை எடுத்து வந்துள்ளனர்.