திருப்பத்துார்: இளைஞர் ஒருவரும், இளம்பெண்ணும் காதலித்த நிலையில் காதலி 9 மாதம் கர்ப்பமாக இருந்தார். இவர்களின் திருமணத்துக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் அடுத்தடுத்து இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். உயிரிழந்த காதல் ஜோடி நித்தின் ராகுல் (21) - தரணி (21) என தெரியவந்துள்ளதோடு தரணி வயிற்றிலிருந்த சிசுவும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.