நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பைக்கில் சென்றவாறு பேட்டி அளித்திருந்தார். அதில், அவரும் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த தொகுப்பாளரும் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்தனர். இதனை கவனித்த சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார், பிரசாந்த் மற்றும் அவரது பின்னால் அமர்ந்து சென்ற தொகுப்பாளர் ஆகியோருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.