நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா

63பார்த்தது
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா 3ம் இடம் பிடித்தார். 12வது நார்வே செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞர் நகரில் நடைப்பெற்றது. இதில் அபாரமாக செயல்பட்ட கார்ல்சென் பேபியானோ கரோனாவை வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம் இவரது ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கை 17.5 ஆக உயர்ந்தது. இதன் மூலம் நார்வே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கார்ல்சென் 6வது முறையாக கைப்பற்றினார். நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2வது இடமும், இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3வது இடமும் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி