'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 'லவ் டுடே' மூலம் நடிகராகவும் தடம் பதித்த பிரதீப் ரங்கநாதன், தற்போது புதிய படமொன்றை தானே இயக்கி, நடிக்க திட்டமிட்டுள்ளாராம். சமீபத்தில் வெளியான 'டிராகன்' படத்தின் வெற்றிக்குப் பின் பல படங்களில் நடித்து வரும் பிரதீப்பின் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.