தமிழகத்தில் இன்று (ஜூன் 11) பல்வேறு மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி, கரூர், புதுக்கோட்டை, தேனி, திருவாரூர், உடுமலைப்பேட்டை, சோத்துப்பெரும்பேடு, கிழக்கு முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.