ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு கிளம்பி சென்ற அரசுப் பஸ்சில் மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். மேலும், செல்போன் டார்ச்சை அடித்தபடி பயணிகளுக்கு நடத்துநர் டிக்கெட் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த காட்சியை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.