மதுரையில் அமித் ஷாவுக்கு எதிரான போஸ்டர்

52பார்த்தது
மதுரையில் அமித் ஷாவுக்கு எதிரான போஸ்டர்
மத்திய பாஜக அரசுக்கு கருத்தியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், "டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் Out of Control தான். எந்த ஷாவாலும் தமிழகத்தை ஆழ முடியாது" என கூறி இருந்தார். இந்நிலையில், மதுரைக்கு அமித் ஷா இன்று (ஜூன் 8) வருகை தந்ததை எதிர்க்கும் பொருட்டு Out of Control வாசகத்தை போஸ்டர் அடித்து பொதுஇடங்களில் ஒட்டியுள்ளனர். இதனால் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், யார் போஸ்டரை வைத்தார்கள் என்ற விபரம் ஏதும் அதில் இடம்பெறவில்லை.

தொடர்புடைய செய்தி