ஸ்போர்ட்ஸ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான Porsche நிறுவனம் உள்நாட்டு சந்தையில் மற்றொரு மாடலை வெளியிட்டுள்ளது. அதன்படி Panamera வரிசையில் மூன்றாவது மாடல் வெளியாகியுள்ளது. இந்த காரின் விலை ரூ.1,69,62,000 (கொல்கத்தா எக்ஸ்-ஷோரூம் விலை) என கூறப்படுகிறது. “ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதால் விலை அதிகம்” என போர்ஷே இந்தியா பிராண்ட் இயக்குநர் மனோலிட்டோ வூஜிசிஸ் தெரிவித்துள்ளார். மேலும், “இறக்குமதி வரி அதிகரிப்பால், இந்த சுமையை வாங்குவோர் மீது சுமத்த வேண்டியுள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.