தமிழில் ‘நாடோடிகள்’, ’ஈசன்’, ’வீரம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான அபிநயா அண்மையில் 'பனி' என்ற மலையாள திரைப்படத்தில் ஆபாசமான காட்சிகளில் நடித்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து அபிநயா அளித்த விளக்கத்தில், “அந்த காட்சியை படத்தில் வைத்ததும், அதில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் இயக்குநர் எடுத்த முடிவு, எனவே அது பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை" என கூறியுள்ளார்.