பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா (72) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (நவ. 05) காலமானார். புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்த போது அவர் உயிர் பிரிந்தது. போஜ்புரி மட்டுமில்லாமல் மைதிலி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை சாரதா பாடியுள்ளார். நாட்டுப்புறப் பாடல்களாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சாரதாவுக்கு நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கடந்த 2018-ம் ஆண்டு வழங்கப்பட்டது.