பொன்முடி சர்ச்சை பேச்சு - அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சை கண்டித்து சென்னை, சைதாப்பேட்டையில் அதிமுக மகளிர் அணி சார்பில் இன்று (ஏப்., 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அண்மையில் தபெதிக நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்கள் மற்றும் சைவம், வைணவம் குறித்து ஆபாசமாக பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் திமுகவில் வகித்து வந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பறித்தார். இதனிடையே பொன்முடிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி