தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரூ.1000 ரொக்கம் தொடர்பான அறிவிப்பு இடம் பெறவில்லை. இதனால், மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.