பொங்கல் தொடர் விடுமுறை... போக்குவரத்து துறை ஆலோசனை!

49135பார்த்தது
பொங்கல் தொடர் விடுமுறை... போக்குவரத்து துறை ஆலோசனை!
பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தொடர் விடுமுறை காரணமாக வரும் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக இன்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. எத்தனை பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும், எந்தெந்த பகுதிகளில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும். முன்னதாக கடந்த நவம்பரில் தீபாவளி பண்டிகை விடுமுறையின் போது 16,895 பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி