மாதுளையின் தோலில் புரதம், பீனாலிக் கலவைகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து முதலானவை நிறைந்துள்ளது. மாதுளையின் தோலில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளதால் சளி, இருமல் தொண்டை வலி முதலானவற்றைப் போக்க உதவுகிறது. தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும்.