பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், "பாலிடெக்னிக் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற ஜூன் 25-ம் தேதி முதல் சிறப்பு துணைத்தேர்வு நடைபெறும்" என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். இந்தச் சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க வரும் 18-ம் தேதி கடைசி நாள். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு https://dte.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பார்க்கவும்.